Naan Mahan Alla – நான் மகான் அல்ல

Naan Magan Alla /  Naan Mahan Alla (Tamil Movie) நான் மகான் அல்ல

BigCinemas, Edison, New Jersey

BigCinemas, Edison, New Jersey

A weeks back I went to Edison “BigCinemas” hall to watch Naan Mahan Alla (நான் மகான் அல்ல
). Its was a very good first half experience than the second half. I will give 45 marks to Director Susindran.

“அம்மா வந்தாச்சு” – விடுதி காவலரும் வந்தாச்சு

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. இதுதான் என்னுடைய மூன்று வருட வாழ்கையைத் தொலைத்த / முழுமையாக தெரிந்துகொண்ட இடம் – சிவகாசி .

மற்ற ஆசிரியர்களின் / ஆசிரியர்களின் நல்லுரைகளை கேட்டு கெட்டுப் போன பெற்றோர்களில் இவர்களும் அடங்குவார்கள். … ஏனெனில் ஆங்கிலப் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்த என்னை .. “நாம் தமிழ் மீடியத்தில் படித்து ஆசிரியராக இல்லையா? நாம் ஏன் பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் சேர்க்க வேண்டும்? ” என சக ஆசிரியர்களும் … நண்பகலும் சொல்ல அப்பா என்னை … தமிழ் மீடியத்திற்கு நான்காம் அரையிறுதி தேர்வு சமயத்தில் மாற்றினார்கள். …

ஆன்ட்ருஸ் எலிமெண்டரி பள்ளி, இராமநாதபுரம் ….இரண்டு ஆண்டுகள் …பின்பு ஐந்து ஆண்டுகள் சுவார்ட்ஸ் மேல் நிலைப் பள்ளி , பின்பு இரண்டு ஆண்டுகள் செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளி … இளம் கலை இயற்பியல் … அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி ….

அப்பா வந்து முதல் நாள் சேர்த்து விட்டுவிட்டு வந்தார். முதல் ஒரு வாரம் ஆங்கில வகுப்புகள் காலை மட்டுமே நடக்குமென அறிவிக்கப்பட்டது. சில மாணவர்கள் … மதிய உணவு முடித்துவிட்டு … சிவகாசிக்குப் படம் பார்க்க சென்று விட்டார்கள் … “அம்மா வந்தாச்சு” …(இயக்குனர் பாக்கியராஜ்). விடுதி காவலரும் வந்தாச்சு ….

… முதல் நாளே மாட்டிக்கொண்டார்கள் .. மறுநாள் முதல்வரிடம் விசாரணை … தண்டனை என விடுதி கலை கட்டியது … தண்டை முடிந்து திரும்பி வந்தவர்கள் கொஞ்சம் தெளிவானவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள் …

அதனால் ஒரு புது இடத்திற்கு செல்லும் போது அங்கு உள்ள விதிமுறைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், … முதலியவற்றை கூர்ந்து கவனித்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும் … முதல் காரியமாக தாங்கும் விடுதி விதிமுறைகளையோ கல்லூரி விதிமுறைகளையோ நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி சிக்கலில் மாட்டி முழிக்க வேண்டியதுதான் …