“அம்மா வந்தாச்சு” – விடுதி காவலரும் வந்தாச்சு

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. இதுதான் என்னுடைய மூன்று வருட வாழ்கையைத் தொலைத்த / முழுமையாக தெரிந்துகொண்ட இடம் – சிவகாசி .

மற்ற ஆசிரியர்களின் / ஆசிரியர்களின் நல்லுரைகளை கேட்டு கெட்டுப் போன பெற்றோர்களில் இவர்களும் அடங்குவார்கள். … ஏனெனில் ஆங்கிலப் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்த என்னை .. “நாம் தமிழ் மீடியத்தில் படித்து ஆசிரியராக இல்லையா? நாம் ஏன் பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் சேர்க்க வேண்டும்? ” என சக ஆசிரியர்களும் … நண்பகலும் சொல்ல அப்பா என்னை … தமிழ் மீடியத்திற்கு நான்காம் அரையிறுதி தேர்வு சமயத்தில் மாற்றினார்கள். …

ஆன்ட்ருஸ் எலிமெண்டரி பள்ளி, இராமநாதபுரம் ….இரண்டு ஆண்டுகள் …பின்பு ஐந்து ஆண்டுகள் சுவார்ட்ஸ் மேல் நிலைப் பள்ளி , பின்பு இரண்டு ஆண்டுகள் செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளி … இளம் கலை இயற்பியல் … அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி ….

அப்பா வந்து முதல் நாள் சேர்த்து விட்டுவிட்டு வந்தார். முதல் ஒரு வாரம் ஆங்கில வகுப்புகள் காலை மட்டுமே நடக்குமென அறிவிக்கப்பட்டது. சில மாணவர்கள் … மதிய உணவு முடித்துவிட்டு … சிவகாசிக்குப் படம் பார்க்க சென்று விட்டார்கள் … “அம்மா வந்தாச்சு” …(இயக்குனர் பாக்கியராஜ்). விடுதி காவலரும் வந்தாச்சு ….

… முதல் நாளே மாட்டிக்கொண்டார்கள் .. மறுநாள் முதல்வரிடம் விசாரணை … தண்டனை என விடுதி கலை கட்டியது … தண்டை முடிந்து திரும்பி வந்தவர்கள் கொஞ்சம் தெளிவானவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள் …

அதனால் ஒரு புது இடத்திற்கு செல்லும் போது அங்கு உள்ள விதிமுறைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், … முதலியவற்றை கூர்ந்து கவனித்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும் … முதல் காரியமாக தாங்கும் விடுதி விதிமுறைகளையோ கல்லூரி விதிமுறைகளையோ நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி சிக்கலில் மாட்டி முழிக்க வேண்டியதுதான் …

A school bus and the students … in Chennai

நான் எனது மகன் அலன் ஜெப்சனை தினமும் காலையில் பள்ளி செல்ல பள்ளிப் பேருந்தில் அனுப்புவது வழக்கம்.

நேற்றும் வழக்கம் போல அவசர அவசரமாக அவன் குளித்து வந்தது தலை துவட்டி,பின்பு உடம்பு முழுவதும் பவுடரை போட்டு,பள்ளிச் சீருடையை மாட்டிவிட்டு, அவனுடைய படப் புஸ்தகங்களை எல்லாம் அடுக்கி, அவனுடைய அம்மா தரும் பேப்பரில் சுற்றிய சப்பாதி உடன் மோட்டார் பைக்கில் ஏற்றி, பள்ளி வாகனம் வரும் இடத்தில் கொண்டு விடுவது வழக்கம்.

நேற்று வழக்கம் போல பேருந்து நிற்கும் இடத்தில் நானும் அலனும் காத்துக்கொண்டிருந்தோம். மடிப்பாக்கம் – கார்த்திகேயபுரம் சாலையோ இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய அளவு உடையது.

அலனுடன் சேர்ந்து மற்ற நன்கு குழந்தைகள் அவிடத்தில் பேருந்தில் ஏறுவார்கள். பேருந்து அதிக பட்சம் இரண்டு நிமிடம் நிற்க வேண்டி இருக்கும். அந்த சமயம் பார்த்து எதிபுறத்தில் இருந்து வந்த 35-40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஸ்கூட்டி என்ற பைக்கில் வந்தாள். பள்ளிக்குழந்தைகள் ஏறுகின்றன என்று தெரிந்த பின்னும் ஒலி எழுப்புவதை நிறுத்த வில்லை.

அங்கு நின்ற ஒரு குழந்தையின் தகப்பனார், “என்ன அவசரமோ தெரிய வில்லை ?” என்று கூறினார்.  அனால் அந்த பெண்மணியோ பள்ளி வாகனம் சென்றதும் “இவர்கள் எப்போதுமே இப்படிதான் வழியை அடைத்துக்கொண்டு  பிள்ளைகளை அனுப்புவார்கள்” அன்று புலம்பியபடியே சென்றது.

மற்றொரு பாட்டி “இவ முன்னப் பின்ன குழந்தை பெற்றிருந்தாத்தான் பிள்ளைகளோட அருமை தெரியப் போகுது” என்று திட்டினார்கள். சில வெளிநாடுகளில் பள்ளிக் குழந்தைகள் வாகனம் நின்றால், அதனை முந்திச் செல்வதுகூடச் சட்டப்படிக் குற்றமாகும். அப்படி நீங்கள் முந்திச் சென்டரல் உங்களுடைய ஓட்டும் சான்றிதல் ரத்து செய்யப்படும்.

ஆகவே பள்ளிக் குழந்தைகள் வாகனம் நின்றால் சற்று பொறுமை காப்பது நல்லது.