Rahel Appatha 100+ (Father’s Mother)

ராஹேல் அப்பத்தா   Rahel Appatha

ராஹேல் அப்பத்தா Rahel Appatha, Ugamai, Ramanathapuram - உகமை, இராமநாதபுரம்

உகமை – அப்பாவின் பிறந்த ஊர், நெடு நாட்களுக்குப் பின் எங்களுடைய கிராமத்துக்குச் சென்று நூறு வயதான அப்பத்தாவை பார்த்து வந்தோம். அப்பத்தாவின் செல்லப் பேரன் நான். எப்போதெல்லாம்  வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் உகமை சென்று அப்பத்தாவை பார்த்து வருவது வழக்கம்.

அப்பத்தா மிகவும் சுருசுருபானவர். அதிகாலமே வயலுக்குச் சென்று வேலை செய்து விட்டு சயந்கள வேலை தான் வீடு திரும்புவார்கள். ஆடு, மாடு, கோழி என அனைத்தையும் அப்பத்தாதான் பார்த்துக் கொள்வார்கள்.

box made up of palm tree leaf  - பனை ஓலை பெட்டி

box made up of palm tree leaf - பனை ஓலை பெட்டி

விவசாய வேலைகள் அதனையும் அத்துப்படி அவர்களுக்கு.  வண்ண வண்ண பனை ஓலைகளில் பாய், பட்டி, தட்டு, விசிறி, சின்ன விளையாட்டு பொருட்கள் (கிலுகிலுப்பை – சிறுசிறு கற்களை உள்ளே போட்டு, ஒரு கைப்பிடியோடு உள்ள சுத்தியல்  போன்று அமைப்புடைய பனை ஓலையால் செய்யப்பட்ட விளையாட்டு பொருள் ) அப்பத்தாவின் பொழுது போக்காகும்.

அப்பத்தாவின் உடை மிகவும் வித்தியாசமாக இருக்கும். தாத்தா மலேசியாவில் உணவகம் மற்றும் பலசரக்கு கடை வைத்திருந்தார்கள். அதனால்  அடிக்கடி மலேசியா சென்று வருவார். அதன் காரணமாக, அப்பத்தாவின் பேச்சு வழக்கும், உடை அணியும் விதமும் மலேசியா கலாச்சார தலுவளாகவே இருக்கும்.

மேலே ஒரு சட்டையும். கேழே ஒரு லுங்கியும், ஒரு வண்ண வண்ண பூப்போட்ட துண்டு சகிதமாக காணப்படுவார்கள்.  ருசியான உணவுகளை (இடியாப்பம், கொழுக்கொட்டை …) மிகச் சீக்கிரத்தில் சமைப்பார்கள். அவ்வப்போது வெற்றிலையும் போடுவார்கள்.  பனை ஓலை கொண்டு பின்னும் வண்ண வண்ண பைகளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

சிறு வயதில் நானும் எனது சித்தப்பா மகன் குமாரும் வேட்டையாடி கொண்டுவரும் கொக்கு மற்றும் இதர சில பறவைகளை அப்பத்தா தன ருசியாக சமைத்து தருவார்கள். ஏரியில் மீன் பிடிப்பதில் அப்பத்தா ஒரு கில்லாடி.  இப்பொழுது நடை தளர்ந்து  விட்டதே தவிர பார்வையும், கேட்கும் திறனும் நன்றாகவே உள்ளது.

Ugamai – My father’s birth place. After a long gap, we traveled to Ugamai and saw our Rahel Appatha (my father’s mothers / father side grand mother ).