நல்லதொரு வீணை செய்து, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

ரயிலில் வந்த வீணையின் கதை

————————————————

சென்ற ஞாயிற்றுக் கிழமை பெங்களூரிலிருந்து “சென்னை மெயிலில்” சென்னை வந்தோம். பெங்களூர் ரயில் நிலையத்தில் உள்ளே ஏறி எங்களுடைய இருக்கையில் உட்கார்தோம். சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு அம்மாவும் மகனும் எங்களுக்கு எதிர் சீட்டில் அமரதார்கள். அந்த வாலிப நண்பர் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலைப் படாமல், கொண்டு வந்த வீணையை (நிறைய பிளாஸ்டிக் உரைகள் போட்டு மூடப்பட்டிருந்த) அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பி ,,, முரட்டாட்டமாக … இருக்கையின் அடியில் நுழைக்க முயன்றார். அவரது அம்மாவோ எவ்வளவோ எடித்துச் சொல்லியும், அவர் அவசர அவசரமாக வீணையை உள்ளே திணித்தார்.

என்னுடைய காலுக்கு நேராக வீணையின் தலைப் பகுதி இருந்தது. அந்த அம்மா சொன்னார்கள், “இது இசை சம்பந்தப் பட்டது, செருப்பு காலை நகர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று.  நான் “கால் படாது அம்மா” என்று மூன்று நான்கு தரம் சொல்லியிருப்பேன். அத்தனை முறை … என் காலைப் பார்ப்பதும் …பின்பு என்னிடம் பத்திரம் என்று சொல்லுவதுமாக இருந்தார்கள் …

ஒரு சமயம் எரிச்சல் அடைந்த நான் … அம்மா நானும் டிரம்ஸ் பசிப்பவன் தான் , இசைக்கு எனக்கு மரியாதை  செய்யத் தெரியும் … கீழே இருப்பது வீணை என்றும் தெரியும் … உடனே அவர்கள் “ஆர்சஸ்ட்ராவா?” ஏன் கேட்டார்கள் .. நான் சொன்னேன் “இல்லை, ஆலயத்தில் டிரம்ஸ் அடிப்பேன்” என்று. பின்பு நாங்கள் தூங்கிவிட்டோம். காலையில் வண்டி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது.

பயணிகள் ஒவ்வொருவராக

 • கழிவு அறைக்குச் செல்லுவதும்
 • முகம் கழுவுவதும்
 • தலை சீவுவதும்
 • கொண்டை போடுவதும்
 • பெட்டி படுக்கைகளை அடுக்குவதும்
 • கதவருகே சில பெரிய சுமைகளை நகர்துவதுமாக இருந்தார்கள் .

எதார்த்தமாக கவனித்தேன் …இவ்வளவு பேசிய அந்த மரியாதைக்குரிய  அம்மா, தன்னுடைய ஈரம் தோய்ந்த செருப்புக் காலால் வீணையை மிதித்துக் கொண்டிருந்தார்கள் … நான் ஏன் மனைவிடம் நைசாக கட்டினேன் அந்த அற்புதக் காட்சியை … நான் அவர்களிடம் சுட்டிக் காட்ட முயன்ற பொது, எனது மனைவி தடுத்துவிட்டு சொன்னார் “அவர்கள் வதில் பெரியவர்கள், விட்டுவிடுங்கள், மிகவும் சுத்தம் எல்லோருமே அப்படிதான் இருப்பார்கள்”.

உடனே எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வந்தது “ஊருக்கு மட்டும் தான் உபதேசம் …”

மகனுடன் மதுரைக்கு …..

ரயிலில் பிரயாணம் செய்வதென்றால் ஏன் மகனுக்கு மிகவும் பிடிக்கும். மதுரைக்குப் போகிரோம் என்று சொன்னாலே மிகவும் சந்தோசம் அவனுக்கு. அவனுடைய பிரயாணத்திற்கு தேவையான பொருட்கள்

 • உணவு பொருட்கள்
 • தண்ணீர்
 • சில கதைப் புத்தகங்கள்
 • பென்சில், பேனா, ரப்பேர்
 • கிரயான்ஸ் (சில)
 • வெள்ளைத்தாள்கள்
 • சிறுசிறு விளையாதுப் பொருட்கள்
 • ஒரு குட்டித் தலையணை
 • ஒரு போர்வை
 • ஒரு வீடியோ கேம்

வீட்டிலிருந்து பரங்கிமலை ரயில்நிலையம் வந்ததுமே, பல கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிடுவான். எழும்பூர் ரயில்நிலையம் வருதற்குள், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் “இன்னும் எத்தனை நிறுத்தங்கள்? ” என்று கேட்பான்.

ஒவ்வொரு ரயில் நிலையம் வந்ததும், நாம் சொன்ன எண்ணிகையில் இருந்து ஒன்றை குறைத்துவிட்டு மீண்டும் என்னிடம் “இன்னும் __ (நான்கு , மூன்று, இரண்டு  …. ) நிலையங்கள் தானே உள்ளது என கேட்பான்.

எழும்பூர் வந்ததும் முதல் காரியமாக ரயில் நிலையத்தில் உள்ள எடை போடும் இயந்திரத்தில் எடை பார்க்க ஒரு ருபாய் கேட்பான் .. சில சமயங்களில் நான் கொடுப்பேன் (அவனது அம்மா அருகில் இல்லை என்றால்) ..

புத்தகக் கடைக்குச் சென்று Magic Pot, Wisdom and Jounior Chandamama …. வாங்குவான் … ஆவின்பால் நிலையத்தில் ஐஸ் கிரீம் ஒன்று கேட்பான் … நானும் வங்கிக் கொடுப்பேன் …

பெட்டிகள் இணைக்கப்படாத என்ஜின்களைப் பார்ப்பதும், தண்டவாலங்களிலில் ஓடித்திரியும் எலிகளைப் பார்ப்பதும் மெகவும் பிடித்த விஷயம்கள்.

இதற்குப்பின் தான் ..பாக்கெட்டுகளில் அடைத்து தொங்கும் சிப்ஸ் கேட்பான் (மிகக் குறைந்த அளவு உள்ள, ஆனால் மிக அதிக விலை போடப்பட்டுள்ள, உடல் நலத்திற்கு சிறிதும் உதவாது / தீங்கு விளைவிக்கக்கூடிய) .. ஒரு அரட்டுப் போட்டதும் … பேசாமல் வந்துவிடுவான் ….

அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் வீட்டிலிருந்தே சமைத்த உணவினை அந்த நறுமணம் மிக்க இரயில் நிலையத்தில் உண்ணவில்லை எனில் … பிரயாணம் பிரயானமகவே இராது. 🙂

பாண்டியன் அதி விரைவு வண்டி வந்ததும், பிரியாணிகள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ஏறுவதை பார்த்து ..ரசித்துவிட்டு / சிரித்துவிட்டு …நிதனமாக ஏறி உள்ளே சென்று … அமர்வது வழக்கம்.

 • சுமைகளை இருக்கைக்கு அடியில் போட்டுவிட்டு, கொண்டுவந்துள்ள செய்தித்தாள், புத்தகம் அல்லது கம்பியுட்டரை …..எதிலாவது ஆழ்ந்து விடுவேன்.
 • அவ்வப்போது மகன் கேட்கும் கேள்விகளுக்குப் பத்தி சொல்லுவது ..
 • கேட்கும் சில ஆங்கில வார்த்தைகளுக்கு விளக்கம் அளிப்பது
 • சில முறை கழிவறை கூட்டிசெல்லுவது …
 • சில நேரம் கதை சொல்லுவது …
 • கிறிஸ்தவ சிவிசெசக புத்தகங்கள் அல்லது வேதாகமத்தில் மூழ்கி இருக்கும் எனது மனைவியை கேலி செய்வது …
 • வண்டி நிக்கும் போதெல்லாம் ஒரு தேநீர் குடிப்பது … சக பயணிகளிடம் பேசுவது ..
 • மகன் தூங்கிய பின், தூக்கத்தில் விழுந்துவிடுவானோ என்று அடிக்கடி முழித்துப் பார்ப்பது …

இப்படியாக நேரம் போனதே தெரியாமல் மதுரை வந்து விடும். எப்பொழுதும் வண்டி மதுரை ரயில் நிலையத்திற்குள் வரும்போதெல்லாம்  அவனுடைய ( எனது மகன்  அலன்) தாத்தா பாட்டி கையசைத்தபடி நிற்பார்கள்.

கீழே இறங்கியதும் .. ம்ம் ..

 • மதுரைக் காற்று ..
 • நெருக்கமான அவசரமான மக்கள் ..
 • சுமைதூக்குபவர்கள் ..
 • ஆங்கங்கே உட்காந்து இருக்கும் உள்ளநாட்டு , வெளிநாட்டு பிரயாணிகள்  ..
 • பிச்சைக்காரர்கள் … ,
 • பிரயாணிகளின் எடையை சொல்ல காசு விழுங்கும்  இயந்திரம்…
 • பிளாட்பார டிக்கெட் கொடுக்க காசு விழுங்கும்  இயந்திரம் (பெரும்பான்மையான நேரங்களில் வேலையே செய்யாத) …
 • திரையை தட்டினால் ரயில் நேரம் மற்றும் இதர தகவல் சொல்லும் இயந்திரம் …
 • ரயில்வே ஊழியர்கள் …
 • எப்பொழுதும் உட்கார்ந்தே போலீஸ்காரர்கள் …
 • தொல்லை கொடுக்கும் ஆட்டோ , டாக்சி , ரிக்சா …ஓட்டுனர்கள்  …
 • ஒரு சிறிய கோயில் …

தாண்டி வெளியே வந்து ஏகனவே புக் செய்த கால் டாக்சியில் வீடு சென்று சேர்வது வடிகயான ஒன்று …