சாக்பீசால் சுவற்றில் A B C …

பெண் குழந்தைகள் பெண் குழந்தைகள்தான் ….

காலை நடை பெற்ற ஆலய ஆராதனையில் கலந்துகொண்டிருக்கும்போது இரண்டு பெண் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. சாக்பீசால் சுவற்றில் A B C … என எழுதுவதும் பின்பு அதனைக் கை கொண்டு அழிப்பதும், பின்பு அழித்த கையினை முகத்தில் பூசியும் விளையாடின. அதனை அந்த குழந்தையின் தயார் கண்டும் , கானானதுபோல் இருந்துவிட்டார்கள். சாக்பீசால் உண்டான சுண்ணாம்புத் துகள்கள் சிறு பிள்ளைகளின் கண்ணில் பட்டுவிடுமோ .. என நான் நினைத்துக் கொண்டிருக்க … அவர்கள் தொடர்ந்து அதே விளையாட்டை விளையாடிகொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு அங்கு வந்த ஓர் ஆண் பிள்ளை ஒரு சாக்பீசை எடுத்து உடைத்து விட்டு , சிட்டாக ஓடி மறைந்தான். அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் மிகச் சிறிய வயதுடையவர்கள் என்றாலும், இந்த வயதிலேயே மேக்கப் போட்டு (சாக்பீஸ் சுண்ணாம்பு துகள்கள் கொண்டு) விளையாடியது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.

ஆலயச் சுவற்றில் எழுவது சிறு பிள்ளைகள்தான் என்றாலும், அவர்களுக்கு அது தவறு என எடுத்துக் கூறுவது பெற்றோரின் கடமை. இப்பொழுதே நாம் இந்தமாதிரியான செயல்களை கொஞ்சம் சரி செய்யா விட்டால் பிற்காலத்தில் பள்ளியின் சுவற்றிலோ அல்லது மேசையின்மீதோ எழுதி தண்டனை பெரும் வாய்ப்பு உள்ளது.

பெண் குழந்தைகள் பெண் குழந்தைகள்தான் ….ஆண் குழந்தைகள் ஆண் குழந்தைகள்தான் ….