தர்ம சங்கடமான நிலை

எம்.சி.எ பட்டப் படிப்பு (M.C.A.) அல்லது பொறியாளர்(B.E / M.E) பட்டப் படிப்பு முடித்து சென்னையில், பெங்களூரில், ஹைதராபாத்தில் வேலை தேடி அலைந்த அனுபவம் பெரும்பாலான மக்களுக்கு உண்டு. அகவே யாராவது வேலை வேண்டியோ அல்லது ப்ராஜெக்ட் கேட்டோ என்னிடம் வந்தால் முடிந்தவரை உதவுவது என்னுடைய வழக்கம்.

நண்பர்கள் மூலமாகவோ அல்லது சொந்தகாரர்கள் மூலமாகவோ இவர்களுக்கு நம்முடைய விலாசமும் அறிமுகமும் கிடைத்துவிடுவது வாடிக்கையான ஒன்று.

என்னுடைய கல்லூரி நண்பனின் (Friend-I) சொந்தக்காரர் ஒருவர் (Friend of friend – FoF) இறுதியாண்டு ப்ராஜெக்ட் கேட்டு வந்தார். நண்பரும் கூட வந்திருந்தார். நானும் அவருடைய ரெசுயும் (Resume) பார்த்துவிட்டு …ஒரு சில நண்பர்களின் அலுவலகங்களுக்கு மின்னஞ்சல்(e-mail) அனுப்பினேன். என்னுடைய நெடுநாள் நண்பர்(Friend-II) ஒருவர் ப்ராஜெக்ட் தர முன்வந்தார். ஏற்கனவே இந்த நண்பர் எனக்காக பல கல்லூரி மாணவர்களுக்கு உதவயுள்ளர்.

முதல் நாள் நான் அவர்களுடன் சென்று என்னுடைய நண்பனை அறிமுகம் செய்து … பின்பு அவருடைய சொந்தக்காரரையும் அறிமுகம் செய்து வைத்தேன். அதன் பிறகு நான் அந்த புதிய நபரை பார்க்கவே இல்லை. என் நண்பன் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து .. ப்ராஜெக்ட் கொடுத்த நண்பருக்கு ஒரு சின்ன விருந்து கொடுக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எங்கள் இருவருடை அலுவலக வேலை காரணமாக … செல்ல முடியவில்லை. அதன் பிறகு நான் அந்த நண்பரின் நண்பரை (FoF) மறந்தே போனேன்.

சில தினங்களுக்கு முன், என்னுடைய நண்பனிடமிருந்து ஒரு தலை பேசி அழைப்பு வந்தது. அவர் சொன்னார், நண்பரின் நண்பர்(FoF) அதே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகவும், சிலமாதங்கள் வேலைக்குப் போனதாகவும், ஒரு சின்ன பிரச்சனை காரணமாக அவரை வேலையே விட்டு நீக்கி விட்டுவிட்டதாகவும், அந்த மாதத்தில் வேலை பார்த்த தினங்களுக்கு சம்பளம் தரவில்லை என்றும், எக்ஸ்பிரியன்ஸ் சான்றிதல் தரமருப்பதகவும் கூறினார்.

என்ன விஷயம்?  என கேட்டதற்கு .. நண்பன் சொன்னார் … நண்பரின் நண்பன் .. ஒரு விடுமுறை நாளில் நேர்முகத்தேர்வு சென்றதாகவும், அதை யாரோ பார்த்து சொல்லிவிட்டதால் வேலையே விட்டு நிறுத்தி விட்டடாதகவும் சொன்னார்.  சம்பளம் போனால் போகட்டும் , எக்ஸ்பிரியன்ஸ் சான்றிதல் (experience certificate) மட்டுமாவது வங்கிக் கொடு என்று கேட்டார்.  வேலை கொடுத்த நண்பரோ … இதுவரை என்னிடம் எந்த குறையும் சொல்லவில்லை.  … செய்வதறியாது விழிக்கிறேன் ?

தர்மமா சங்கடமான நிலை

  1. என்னுடைய நண்பனிடம் பேச மனச்சங்கடமாக உள்ளது
  2. ப்ராஜெக்டும் வேலையும் கொடுத்த நண்பனிடம் பேச மனச்சங்கடமாக உள்ளது
  3. யாராவது உதவி கேட்டால் … பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது.