சாக்பீசால் சுவற்றில் A B C …

பெண் குழந்தைகள் பெண் குழந்தைகள்தான் ….

காலை நடை பெற்ற ஆலய ஆராதனையில் கலந்துகொண்டிருக்கும்போது இரண்டு பெண் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. சாக்பீசால் சுவற்றில் A B C … என எழுதுவதும் பின்பு அதனைக் கை கொண்டு அழிப்பதும், பின்பு அழித்த கையினை முகத்தில் பூசியும் விளையாடின. அதனை அந்த குழந்தையின் தயார் கண்டும் , கானானதுபோல் இருந்துவிட்டார்கள். சாக்பீசால் உண்டான சுண்ணாம்புத் துகள்கள் சிறு பிள்ளைகளின் கண்ணில் பட்டுவிடுமோ .. என நான் நினைத்துக் கொண்டிருக்க … அவர்கள் தொடர்ந்து அதே விளையாட்டை விளையாடிகொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு அங்கு வந்த ஓர் ஆண் பிள்ளை ஒரு சாக்பீசை எடுத்து உடைத்து விட்டு , சிட்டாக ஓடி மறைந்தான். அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் மிகச் சிறிய வயதுடையவர்கள் என்றாலும், இந்த வயதிலேயே மேக்கப் போட்டு (சாக்பீஸ் சுண்ணாம்பு துகள்கள் கொண்டு) விளையாடியது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.

ஆலயச் சுவற்றில் எழுவது சிறு பிள்ளைகள்தான் என்றாலும், அவர்களுக்கு அது தவறு என எடுத்துக் கூறுவது பெற்றோரின் கடமை. இப்பொழுதே நாம் இந்தமாதிரியான செயல்களை கொஞ்சம் சரி செய்யா விட்டால் பிற்காலத்தில் பள்ளியின் சுவற்றிலோ அல்லது மேசையின்மீதோ எழுதி தண்டனை பெரும் வாய்ப்பு உள்ளது.

பெண் குழந்தைகள் பெண் குழந்தைகள்தான் ….ஆண் குழந்தைகள் ஆண் குழந்தைகள்தான் ….

Thumb Sucking

கை சூப்புதல்

கை சூப்புதல்

குழந்தைகள் கை சூப்புவதை பார்த்து இருப்பீர்கள். இவர் என்னுடைய  தங்கையின் மகன் (எனது மருமகன்) எப்பொழுதுமே கை சூப்பிக்கொண்டிருப்பர். இந்த கை சூப்பும் பழக்கத்தை மறக்கடிக்க பலவித முயற்சிகளை மேற்கொண்டனர். எதுவும் பலன் அளிக்கவில்லை. துங்கும் போது விளக்கெண்ணையை தடவிப்பார்த்தத்கள்.

ஒரு சில நாட்களே தாக்குப் பிடித்து இந்த முயற்சி. பிறகு “பழைய குருடி கதவைத் திறடி” (பழ மொழி) என்பதுபோல் கை மீண்டும் வயிற்கு சென்றது. பல பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்துச் செய்த இந்த முடிவு வீணானதைத் தொடர்ந்து நவீன கால பெற்றோரிடம் கலந்து ஆலோசித்து வேறொரு முடிவு செய்யப்பட்டது.

கையிலே பிளாஸ்டர் போடப்பட்டது. கையிலே புண் வந்துள்ளதாக குழந்தைகளிடம் பொய் சொல்லப்பட்டது. இப்பொழுது குழந்தை கையை வாயில் வைப்பதை தற்காலிகமாக நிறுத்தி  உள்ளது.

I saw a google video Stop Thumb Sucking – How To Help Your Child Stop Thumb Sucking. The author was explaining the “Thumb Sucking” in details.