நல்லதொரு வீணை செய்து, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

ரயிலில் வந்த வீணையின் கதை

————————————————

சென்ற ஞாயிற்றுக் கிழமை பெங்களூரிலிருந்து “சென்னை மெயிலில்” சென்னை வந்தோம். பெங்களூர் ரயில் நிலையத்தில் உள்ளே ஏறி எங்களுடைய இருக்கையில் உட்கார்தோம். சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு அம்மாவும் மகனும் எங்களுக்கு எதிர் சீட்டில் அமரதார்கள். அந்த வாலிப நண்பர் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலைப் படாமல், கொண்டு வந்த வீணையை (நிறைய பிளாஸ்டிக் உரைகள் போட்டு மூடப்பட்டிருந்த) அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பி ,,, முரட்டாட்டமாக … இருக்கையின் அடியில் நுழைக்க முயன்றார். அவரது அம்மாவோ எவ்வளவோ எடித்துச் சொல்லியும், அவர் அவசர அவசரமாக வீணையை உள்ளே திணித்தார்.

என்னுடைய காலுக்கு நேராக வீணையின் தலைப் பகுதி இருந்தது. அந்த அம்மா சொன்னார்கள், “இது இசை சம்பந்தப் பட்டது, செருப்பு காலை நகர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று.  நான் “கால் படாது அம்மா” என்று மூன்று நான்கு தரம் சொல்லியிருப்பேன். அத்தனை முறை … என் காலைப் பார்ப்பதும் …பின்பு என்னிடம் பத்திரம் என்று சொல்லுவதுமாக இருந்தார்கள் …

ஒரு சமயம் எரிச்சல் அடைந்த நான் … அம்மா நானும் டிரம்ஸ் பசிப்பவன் தான் , இசைக்கு எனக்கு மரியாதை  செய்யத் தெரியும் … கீழே இருப்பது வீணை என்றும் தெரியும் … உடனே அவர்கள் “ஆர்சஸ்ட்ராவா?” ஏன் கேட்டார்கள் .. நான் சொன்னேன் “இல்லை, ஆலயத்தில் டிரம்ஸ் அடிப்பேன்” என்று. பின்பு நாங்கள் தூங்கிவிட்டோம். காலையில் வண்டி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது.

பயணிகள் ஒவ்வொருவராக

  • கழிவு அறைக்குச் செல்லுவதும்
  • முகம் கழுவுவதும்
  • தலை சீவுவதும்
  • கொண்டை போடுவதும்
  • பெட்டி படுக்கைகளை அடுக்குவதும்
  • கதவருகே சில பெரிய சுமைகளை நகர்துவதுமாக இருந்தார்கள் .

எதார்த்தமாக கவனித்தேன் …இவ்வளவு பேசிய அந்த மரியாதைக்குரிய  அம்மா, தன்னுடைய ஈரம் தோய்ந்த செருப்புக் காலால் வீணையை மிதித்துக் கொண்டிருந்தார்கள் … நான் ஏன் மனைவிடம் நைசாக கட்டினேன் அந்த அற்புதக் காட்சியை … நான் அவர்களிடம் சுட்டிக் காட்ட முயன்ற பொது, எனது மனைவி தடுத்துவிட்டு சொன்னார் “அவர்கள் வதில் பெரியவர்கள், விட்டுவிடுங்கள், மிகவும் சுத்தம் எல்லோருமே அப்படிதான் இருப்பார்கள்”.

உடனே எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வந்தது “ஊருக்கு மட்டும் தான் உபதேசம் …”

M.B.A. Limited Seats …. says Tamil Actress Namitha

M.B.A. Limited Seats available

M.B.A. Limited Seats available

Just for fun …. I took this photo in front of a petty shop. This combination of images looks like Actress Namitha is promoting a —- college M.B.A. course. I don’t think these devils are selling fruits … What do you say guys …? this Jagan Mohini tamil movie poster overlapping on a M.B.A. ad.

ஒரு பெட்டிகடை முன்  எடுத்த படம் இது. நடிகை நமீதா (தமிழ் சினிமாப் படங்கள் ) — கல்லூரிக்கு M.B.A. துறைக்கு
விளம்பரம் செய்வது போன்று உள்ளது. ஆவி உலகின் அதிசயராணி – ஜெகன் மோகினி என்ற படப் போஸ்டரும், வேறொரு கல்லூரி போஸ்டரும் ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டி இப்படிக் காட்சியளிக்கிறது.

நகைச்சுவை : யாரோ சொன்ன ஒரு கதை நினைவிற்கு  வருகிறது. பேப்பரில் செய்தி வரும்போது அவை அச்சிடப்படும் இடம் ரொம்ப முக்கியம். இப்படித்தான் ஒரு நாள் ஒரு செய்தித்தாளில் ஒரே பக்கத்தில் ஒரே ஊரைச்சேர்ந்த இரண்டு செய்திகள் அருகருகே  வந்தன. தனித்தனியே படித்தால் செய்திகளின் கருத்தே வேறு. ஒன்றாக படித்தால் கருத்தே வேறு.
இடப்பக்கம் வெளியான முதல் செய்தி. அரசு மருத்துவமனைக்குப் புதிய டாக்டர்கள் வருகை.

வலப்பக்கம் வெளியான இரண்டாவது செய்தி: சுடுகாடுகள் விஸ்தரிப்பு.