நல்லதொரு வீணை செய்து, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

ரயிலில் வந்த வீணையின் கதை

————————————————

சென்ற ஞாயிற்றுக் கிழமை பெங்களூரிலிருந்து “சென்னை மெயிலில்” சென்னை வந்தோம். பெங்களூர் ரயில் நிலையத்தில் உள்ளே ஏறி எங்களுடைய இருக்கையில் உட்கார்தோம். சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு அம்மாவும் மகனும் எங்களுக்கு எதிர் சீட்டில் அமரதார்கள். அந்த வாலிப நண்பர் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலைப் படாமல், கொண்டு வந்த வீணையை (நிறைய பிளாஸ்டிக் உரைகள் போட்டு மூடப்பட்டிருந்த) அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பி ,,, முரட்டாட்டமாக … இருக்கையின் அடியில் நுழைக்க முயன்றார். அவரது அம்மாவோ எவ்வளவோ எடித்துச் சொல்லியும், அவர் அவசர அவசரமாக வீணையை உள்ளே திணித்தார்.

என்னுடைய காலுக்கு நேராக வீணையின் தலைப் பகுதி இருந்தது. அந்த அம்மா சொன்னார்கள், “இது இசை சம்பந்தப் பட்டது, செருப்பு காலை நகர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று.  நான் “கால் படாது அம்மா” என்று மூன்று நான்கு தரம் சொல்லியிருப்பேன். அத்தனை முறை … என் காலைப் பார்ப்பதும் …பின்பு என்னிடம் பத்திரம் என்று சொல்லுவதுமாக இருந்தார்கள் …

ஒரு சமயம் எரிச்சல் அடைந்த நான் … அம்மா நானும் டிரம்ஸ் பசிப்பவன் தான் , இசைக்கு எனக்கு மரியாதை  செய்யத் தெரியும் … கீழே இருப்பது வீணை என்றும் தெரியும் … உடனே அவர்கள் “ஆர்சஸ்ட்ராவா?” ஏன் கேட்டார்கள் .. நான் சொன்னேன் “இல்லை, ஆலயத்தில் டிரம்ஸ் அடிப்பேன்” என்று. பின்பு நாங்கள் தூங்கிவிட்டோம். காலையில் வண்டி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது.

பயணிகள் ஒவ்வொருவராக

  • கழிவு அறைக்குச் செல்லுவதும்
  • முகம் கழுவுவதும்
  • தலை சீவுவதும்
  • கொண்டை போடுவதும்
  • பெட்டி படுக்கைகளை அடுக்குவதும்
  • கதவருகே சில பெரிய சுமைகளை நகர்துவதுமாக இருந்தார்கள் .

எதார்த்தமாக கவனித்தேன் …இவ்வளவு பேசிய அந்த மரியாதைக்குரிய  அம்மா, தன்னுடைய ஈரம் தோய்ந்த செருப்புக் காலால் வீணையை மிதித்துக் கொண்டிருந்தார்கள் … நான் ஏன் மனைவிடம் நைசாக கட்டினேன் அந்த அற்புதக் காட்சியை … நான் அவர்களிடம் சுட்டிக் காட்ட முயன்ற பொது, எனது மனைவி தடுத்துவிட்டு சொன்னார் “அவர்கள் வதில் பெரியவர்கள், விட்டுவிடுங்கள், மிகவும் சுத்தம் எல்லோருமே அப்படிதான் இருப்பார்கள்”.

உடனே எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வந்தது “ஊருக்கு மட்டும் தான் உபதேசம் …”