My father taught me a skill – 1

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

அப்பாவிடம் பயின்ற லைகள் – தென்னை ஓலையில் தட்டி பின்னுதல் : வேலூருக்கு அருகில் உள்ள பள்ளிகொண்டா என்ற ஊரில் நான் நான்காம் வகுப்பு வரை படித்தேன். அப்போதுதான் தட்டி பின்னும் முறையை அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். நேற்று முன்தினம் பெய்த மழையின்போது இரண்டு தென்னை ஓலைகள் கீழே விழுந்தன. ஞாயிற்றுகிழமை அவற்றை தட்டியாக பின்னினேன்.

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

அப்பா என்னுடைய மிக நெருங்கிய நண்பர், ஆசான், … அப்பா ஒரு சுருசுருப்ப்பான நபர். பாட்டி எப்பொழுதும் அப்பாவை திட்டுவர்கர்கள் “சாப்பிட கை ஈரம் காயாமல் அடுத்த வேலைக்கு போராயட .. கொஞ்சம் ஓய்வு எடுக்க கூடாதா ?”. அவரிடன் நான் கற்றுக்கொண்டவை மிக அதிகம். இந்த தட்டி பின்னுதலை மிகப்பொறுமையாக சொல்லிக்கொடுத்தார். பள்ளி நாட்களை ஓலையின் ஓரத்தில் நண்பன் ஒருவனை உட்காரவைத்து, மட்டையை படித்துக்கொண்டு ஓடி விளையாடியதை அடுத்த வகுப்பு மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் போட்டுக்கொடுக்க, செம அடி வாங்கியது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை மரம் தமிழக மக்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறின்போது, குருத்தோலைகளை கைகளில் பிடித்தவாரு ஆலயத்தைச் சுற்றி வருவார்கள். குழந்தைகளுக்கு குருத்து ஓலைகளால் ஆனா சிலுவைகளை செய்து கொடுப்பார்கள். பெரும்பாலான தமிழக திருமண வீடுகளில் தென்னை இலை தோரணங்கள் தொங்க விடப்படும். திருமண வீடுகளோ, கோயில் திருவிழாவோ, ஈமச் சடங்கோ, தென்னை இலை தட்டிகளால் ஆனா கூரைகள் போடப்படும். ஓலைகளிலேயே பெரிய ஓலையாக எடுத்து கத்திச்சண்டை போட்டது ஒரு காலம். ஓலைப் பாய்களை ஆடு மாடுகள் அடைக்கும் அறைக்கு வேலியாகவும் கதவுகளாகவும் கிராமங்களில் உபயோகிப்பார்கள்.  தென்னை ஓலைகளின் இலைப் பகுதியை கிழித்துவிட்டு கிடைக்கும் குத்சியை சேர்த்து கூட்டுமாரக உபயோகிப்பார்கள். தென்னை மட்டையை அடித்துப் பிரித்து தென்னங் கயறு செய்வார்கள்.

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

ஏழைகளின் வீடுகள் தென்னை இலையினால் செய்யப்பட்ட தட்டிகளால் உண்டாக்கப்படுகின்றன.  தற்போது நான் தங்கியுள்ள வீட்டின் குஉரை சற்று  தாழ்வாக உள்ளது. தனி வீடாக இருப்பதாலும், வீட்டை சுற்றி சிமன்ட் தரையாக இருப்பதாலும், எப்பொழுதும் வீடு வெப்பமாகவே  உள்ளது.  வெப்பத்தை தணிக்க  என்ன வழி  என்று பெரியவர்களிடம் கேட்ட  போது, பெரும்பாலானோர் சொன்னது, மடியில்   ஒரு கூரை வீடு போட்டு விடுங்கள் அல்லது தென்னை ஏழை  தட்டிகளை

வீட்டு முதலாளியின் அனுமதி பெற்று சில தென்னை ஓலைகளை மாடியில் போடும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதே போல் தேங்காய் உறித்தபின் கிடைக்கும் மட்டைகளையும் மடியில் போட்டு வருகிறேன். இந்த சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகள் சிமென்ட் தரையாக கட்சி அளிக்கிறது. பின்பு எப்படி மழை நீர் பூமியின் உள்ளே செல்லும்?. எப்படி நீர் மட்டம் உயரும்?.

வீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடிகளை நாடும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். இந்த தென்னை மரங்களில் ஏறி விளையாடுவது எனக்கு மிகவும் படித்த ஒன்றாகும். வேலூரில் உள்ள எனது மீனாப் பெரியம்மா வீடிற்கு செல்லும் போதுஎல்லாம் தென்னை மரத்தில் ஏறி காய்களை பறித்துப் போடுதல் மட்டைகளை தரித்து விடுதல், சுத்தம் செய்தல் …. போன்றவை எனக்கு மிகவும் பிடித்த வேலைகளாகும்.

The skills that I learned from my father: I learned this “making mat in coconut tree leaves” from my dad when I was doing my fourth standard in Pallikonda near Vellore.