From நிஜ முறம் to பிளாஸ்டிக் முறம்

Plastic muram

Plastic muram முறம் (அல்லது சுளகு, சொலவு)

முறம் (அல்லது சுளகு, சொலவு) என்பது தானியங்களை உமி, கல் , குச்சி   போன்ற பொருட்களை   பிரித்தெடுக்க உதவும்  ஒரு  கருவியாகும்.  தமிழக கிராமப்புரங்கள்  மட்டும் அல்லாமல், நகரங்களிலும் இப்பொழுது இந்த முரதினை பயன்படுத்துகிறார்கள்.  சென்ற வாரம் தியாகராய  நகரில் உள்ள சரவணா கடையில் பிளாஸ்டிக் முறத்தினை பார்த்தேன். என்னதான் அழகான வண்ணங்களில் இருந்தாலும், நிஜ முறம் போன்று இல்லை.

முறத்தின்  பயன்பாடுகள்

 1. சிறு சிறு கற்களை நீக்க
 2. சிறு சிறு தூசிகளை நீக்க
 3. கருவாடு காயவைக்க
 4. வடகம் காயவைக்க
 5. கீரை இலைகளை ஆயும்போது
 6. தானியங்களை காயவைக்க
 7. அறுவடையின்போது தூசிகளை விரட்டியடிக்க
 8. பலகாரங்களை அடுக்கி வைக்க

வேலை இல்லாத நேரங்களில் ஆணிகளில் உஞ்சலடுவதும் ….

Lady’s finger

First laddy's finger in my puzhuthivakkam house
First laddy’s finger in my puzhuthivakkam house

Lalbagh Botanical Garden, Bangalore, Karnataka

Lalbagh Botanical Garden, Bangalore, Karnataka

Lalbagh Botanical Garden, Bangalore, Karnataka

My dad brought us (Myself and my brother Jacob Inbaneson) Lalbagh Botanical Garden, Bangalore, Karnataka in our school tour. That time I was amazed about the tall trees …. every where green grasses …. chill climate … After a long time a couple of week back I went there with my brother in law. After we finished our sight seeing … after we had a average meal in front of the garden … I took this pic.

Agronol – Growel Coconut Special

Coconut - Growel Cocunut Special

Coconut - Growel Cocunut Special

My house has two coconut trees (Cocos nucifera). After seeing its condition my uncle from Madurai consulted one his friend, who has a PhD in Botany suggested some chemicals. So my uncle Mr. Jacob Francis brought them to Chennai last month. Its called Agronol, Growel Coconut Special, Manufactired by Annai Agro Chemicals, Tamilnadu. Net wieght is 1 k.g. Maximum retail price is Rs 75.00. The expiry is three years for the packed growel. It contains ferrous iron, manganese, zinc, boron and copper. For each tree yo need 500 gm  of  Growel which will give them the minerals for 6 months. So yearly you need  a 1 kg per tree.

How to use it?

 • Dig a half circle near the root are.
 • Mix the chemical with 3 or for kgs of sand.
 • Now  you cover the hole with this sand Growel mix.
 • On top of it fill the with normal  sand again. pore some water.

Advantages of using Growel:

 1. Avoids the falling of coconuts when they are too small (young)
 2. Increases the number of coconuts per season
 3. Increases the size of the coconuts

After I saw the cover, I am imagining that I will also get at least 500 coconuts per tree for a season 🙂

மழை நீரை சேமிப்போம் – Save Rain Water

Rain Water Usage

Rain Water Usage

மழை பெய்யும் நேரங்களில், மாடியில் இருந்து நீர் ஒரு சில இடங்களில் மற்ற இடங்களைவிட அதிகமாக நீர் விழுவதை பார்த்து இருப்பீர்கள். மழை பெய்தால் இரண்டு மூன்று தினங்களுக்கு செடிகளுக்கு தண்ணீர் விடவேண்டிய வேலை இல்லை. அது போக சாதாரண உபயோகம் போக மீதி இருக்கும் வாளிகளில் மழை நீர் பிடித்து ஓரிரு நாட்கள் சென்ற பின்பு அவற்றை உபயோகப்படுத்துவது மிகச்சிறந்த செயலாகும்.

Rain Water Usage

Rain Water Usage

 • ஒன்று நாம் பிடித்த மழை நீரை செடிகளுக்கு விடலாம்.
 • இரண்டாவதாக பிடித்த மழை நீரைக் கொண்டு துணிகளை துவைக்கலாம். குறிப்பாக குருட்டு அழுக்குப் பிடித்து பழுப்பு நிறமாகத் தெரியும் வெள்ளைத் துணிகளைத் துவைத்தால் அவை நல்ல வெள்ளை நிறத் துணிகளாக மாறும்.
 • மூன்றாவதாக அதிகமான மழை நீர் வந்தால் உங்களுடைய கிணற்றில் விடலாம் , அதனால் கிணற்று நீரில் உப்பின் அளவு குறையும்.

My son Alan’s first job in the morning …

Gardening – cultivation of plants

Morning the moment my son got up from the bed he used to water the plats which we have planted a few weeks back. First few days he was so tensed to see how a seed will come out from the earth. He was referring is Science Book.

Alan is watering the plants

Alan is watering the plants

After a heavy rain we lost half of the plants. But still few plants are growing green.

My father taught me a skill – 1

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

அப்பாவிடம் பயின்ற லைகள் – தென்னை ஓலையில் தட்டி பின்னுதல் : வேலூருக்கு அருகில் உள்ள பள்ளிகொண்டா என்ற ஊரில் நான் நான்காம் வகுப்பு வரை படித்தேன். அப்போதுதான் தட்டி பின்னும் முறையை அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். நேற்று முன்தினம் பெய்த மழையின்போது இரண்டு தென்னை ஓலைகள் கீழே விழுந்தன. ஞாயிற்றுகிழமை அவற்றை தட்டியாக பின்னினேன்.

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

அப்பா என்னுடைய மிக நெருங்கிய நண்பர், ஆசான், … அப்பா ஒரு சுருசுருப்ப்பான நபர். பாட்டி எப்பொழுதும் அப்பாவை திட்டுவர்கர்கள் “சாப்பிட கை ஈரம் காயாமல் அடுத்த வேலைக்கு போராயட .. கொஞ்சம் ஓய்வு எடுக்க கூடாதா ?”. அவரிடன் நான் கற்றுக்கொண்டவை மிக அதிகம். இந்த தட்டி பின்னுதலை மிகப்பொறுமையாக சொல்லிக்கொடுத்தார். பள்ளி நாட்களை ஓலையின் ஓரத்தில் நண்பன் ஒருவனை உட்காரவைத்து, மட்டையை படித்துக்கொண்டு ஓடி விளையாடியதை அடுத்த வகுப்பு மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் போட்டுக்கொடுக்க, செம அடி வாங்கியது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை மரம் தமிழக மக்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறின்போது, குருத்தோலைகளை கைகளில் பிடித்தவாரு ஆலயத்தைச் சுற்றி வருவார்கள். குழந்தைகளுக்கு குருத்து ஓலைகளால் ஆனா சிலுவைகளை செய்து கொடுப்பார்கள். பெரும்பாலான தமிழக திருமண வீடுகளில் தென்னை இலை தோரணங்கள் தொங்க விடப்படும். திருமண வீடுகளோ, கோயில் திருவிழாவோ, ஈமச் சடங்கோ, தென்னை இலை தட்டிகளால் ஆனா கூரைகள் போடப்படும். ஓலைகளிலேயே பெரிய ஓலையாக எடுத்து கத்திச்சண்டை போட்டது ஒரு காலம். ஓலைப் பாய்களை ஆடு மாடுகள் அடைக்கும் அறைக்கு வேலியாகவும் கதவுகளாகவும் கிராமங்களில் உபயோகிப்பார்கள்.  தென்னை ஓலைகளின் இலைப் பகுதியை கிழித்துவிட்டு கிடைக்கும் குத்சியை சேர்த்து கூட்டுமாரக உபயோகிப்பார்கள். தென்னை மட்டையை அடித்துப் பிரித்து தென்னங் கயறு செய்வார்கள்.

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

தென்னை ஓலையில் தட்டி பின்னுதல்

ஏழைகளின் வீடுகள் தென்னை இலையினால் செய்யப்பட்ட தட்டிகளால் உண்டாக்கப்படுகின்றன.  தற்போது நான் தங்கியுள்ள வீட்டின் குஉரை சற்று  தாழ்வாக உள்ளது. தனி வீடாக இருப்பதாலும், வீட்டை சுற்றி சிமன்ட் தரையாக இருப்பதாலும், எப்பொழுதும் வீடு வெப்பமாகவே  உள்ளது.  வெப்பத்தை தணிக்க  என்ன வழி  என்று பெரியவர்களிடம் கேட்ட  போது, பெரும்பாலானோர் சொன்னது, மடியில்   ஒரு கூரை வீடு போட்டு விடுங்கள் அல்லது தென்னை ஏழை  தட்டிகளை

வீட்டு முதலாளியின் அனுமதி பெற்று சில தென்னை ஓலைகளை மாடியில் போடும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதே போல் தேங்காய் உறித்தபின் கிடைக்கும் மட்டைகளையும் மடியில் போட்டு வருகிறேன். இந்த சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகள் சிமென்ட் தரையாக கட்சி அளிக்கிறது. பின்பு எப்படி மழை நீர் பூமியின் உள்ளே செல்லும்?. எப்படி நீர் மட்டம் உயரும்?.

வீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடிகளை நாடும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். இந்த தென்னை மரங்களில் ஏறி விளையாடுவது எனக்கு மிகவும் படித்த ஒன்றாகும். வேலூரில் உள்ள எனது மீனாப் பெரியம்மா வீடிற்கு செல்லும் போதுஎல்லாம் தென்னை மரத்தில் ஏறி காய்களை பறித்துப் போடுதல் மட்டைகளை தரித்து விடுதல், சுத்தம் செய்தல் …. போன்றவை எனக்கு மிகவும் பிடித்த வேலைகளாகும்.

The skills that I learned from my father: I learned this “making mat in coconut tree leaves” from my dad when I was doing my fourth standard in Pallikonda near Vellore.