சதாப்தி எக்ஸ்பிரஸ் | Sathapthi Express

சதாப்தி எக்ஸ்பிரஸ்| Sathapthi Express
கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் இருந்து பெங்களூர் வரை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தேன். ஆபீஸ் வேலை காரணமாக பாத்து நாட்கள் பெங்களூர் வந்துள்ளேன். காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் இரண்டு சாக்கிலேட் கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே காபி அல்லது  தேநீர் இரண்டும் வழங்கினார்கள். இன்னும் சிறிது நேரம் கழித்து மினரல் வாட்டர் (அக்குவா பீநா ) ஒரு பாட்டில் தந்தார்கள். இன்னும் சிறிது நேரம் கழித்து காலை உணவு பரிமாறினார்கள். பிரட் மற்றும் ஜாம், வெண் பொங்கல், வடை, சாம்பார், சட்டினி … இவை அனைத்தும் காலை உணவில் அடங்கும். பின்னும் அவ்வப்போது … காபி / டீ வேண்டுமா? என அடிக்கடி விசாரித்தார்கள் …

சுடு தண்ணீர் கேட்ட பயணிகளுக்கு சுடு தண்ணீர் வழங்கினார்கள். ஒரு சில பயணிகள் எழுந்து நடப்பது  பின்பு உட்காருவதுமாக  இருந்தார்கள் . ஒரு பயணி ” காசு வாங்குறாங்க , ஆனா குளிர் சாதனப் பெட்டி வேலை   செய்யுதான்னே தெரியல ” என்று புலம்பினார்.

பெங்களூருக்கு விமானத்தில் சென்று, பின்பு நகருக்குள் வர ஒரு/இரண்டு மணி நேரம் பிடித்து …கஷ்டப்பட்டு வருவதை பார்க்கிலும் இந்த ரயிலில்  நான்கு மணி இருபது நிமிசத்தில்
வருவது நலம்.

குடிக்க தண்ணீர்  கூட தராத/கிடைக்காத, குறுகலான இருக்கைகள், காலதாமதங்கள் அடிக்கடி நிகழும்  விமான வழி நல்லதா?  அல்லது அகலமான இருக்கைகள், குளிர் சாதனா வசதி, மின்சாரவசதி (மொபைல் மற்றும் லேப்டோப்கள் சார்ஜ் செய்ய ), சற்று நடந்து செல்ல இடம், சைவ / அசைவ உணவு (உணவு உங்களுடைய டிகேட் விலையில் உள்ளடக்கம்), பெரும்பாலும் கால தாமதங்கள் இல்லாத பிரயாணம் நல்லதா?

முடிவு உங்கள் கையில் …

Last Sunday I traveled from Chennai to Bangalore in Sathapthi Express
for an official trip (at least 10 day in Bangalore). I liked the journey very much because first time I saw some southern railway’s employee … treating passengers as a friend … They served biscuits and chocolates first .. then they served tea / coffee to all the passengers … then a bottle of mineral water (Aquafina) … then the a good breakfast .. bread and jam … ven pongal … vadai .. saambar & chatni … butter … After a while again they started to serve tea / coffee again … they helped some passengers who asked the for hot water …

They randomly gave a feedback for to passengers to ask about their services .. some of the interesting questions are …

  1. Do you faced any water problem?
  2. Do you faced any electrical problem?
  3. Do you saw a rat?
  4. Do you find any cockroach?
  5. write your comments

So wrote a comment that the power plug point near my seat was not working proper … one of the staff came and told me .. today itself we rectify the fault .. after that train reaches Bangalore.  … Nice initiative … hats off to Southern Railways .. 🙂

Instead of traveling in flight from Chennai to Bangalore … It took only 4 hours and 15 minutes to reach Bangalore. It you are traveling in flight … you need 1 hour in Chennai airport … flying 45 min … reach the city may take 2/3 hours … in busy hours … Is better to travel in this train ,,, its my personal opinion.