Bajjee ,Ice-cream and Tender Coconut

bajeeicecreamcoconut

Bajjee ,Ice-cream and Tender Coconut - பஜ்ஜீ, ஐஸ்கிரீம் மற்றும் இளநீர்

பஜ்ஜீ, ஐஸ்கிரீம் மற்றும் இளநீர் அலனுடைய பள்ளி ப்ராஜெக்ட் நாளுக்காக வீட்டில் பஜ்ஜீ, ஐஸ்கிரீம் மற்றும் இளநீர் முதலியவற்றின் மாதிரிகளை செய்தோம்.
பஜ்ஜீ: ஒரு சிறைய அட்டையை எடுத்து செவ்வக வடிவில் வெட்டி அதன் மீதி மீண்டும் ஒரு அதே அளவு செவ்வக அட்டையை ஓட்ட வேண்டும். அத மீது வெள்ளை நிற அட்டை / பிரவுன் நிற அட்டையில் போதியவேண்டும். வெளியே வெள்ளை அட்டையைப் பயன்படுத்தினால் அதன் மீது ஆரஞ்சு நிற வண்ணம் தீட்ட வேண்டும். இரண்டு ஓரங்களிலும் கருப்பு அல்லது பிரவுன் நிறத்தினால் லேசாக வண்ணம் தீட்ட வேண்டும்.

ஐஸ்கிரீம்: ஒரு அட்டைப்பெட்டியின் ஒரு ஓரப் பகுதியை கிழித்துக்கொண்டு, கடைகளில் பொட்டலம் போடுவதற்காக செய்தித் தாள்களை சுருட்டுவார்கள் அல்லவா? அதுபோல சுருட்டிக்கொண்டு, மேல் முனையில் உட்புரமாக மடக்கி விடவேண்டும். இப்போது உட்பகுதியில் கோந்து அல்லது பெவிகோல் தடவி அதன் மீது பஞ்சை உருண்டை வடிவில் உருட்டி ஒட்டவேண்டும். பஞ்சு உருண்டையில் மேல் பகுதியில் சிகப்பு நிறத்தால் ஒரு சின்ன வட்டம் வரைய வேண்டும். சிறிது நேரம் காயவைத்த பின்பு வேறு வேறு நிறங்களைப் பூசி வெவ்வேறு வகையான ஐஸ்கிரீமைத் தயாரிக்கலாம்.

இளநீர்: வெள்ளை நிறை சார்ட்டினை செவ்வக வடிவில் வெட்டியெடுத்து கடைகளில் சுற்றும் பொட்டலம் போன்று உருட்டிக்கொள்ள வேண்டும். பின்பு அதை பழைய பேப்பர்களால்  நிரப்பி, மேலே வெள்ளை தாள் கொண்டு மூடிவிடுங்கள். பின்னர் பச்சை நிற வாட்டர் கலர் முழுவதும் பூசிவிடுங்கள். இளநீரின் காம்பும், தையில் உள்ள தொப்பி போன்ற பகுதியும் ஒட்டிவிட்டால் … இளநீர் ரெடி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: