சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி

நாங்கள் குடும்பமாக இன்று காலை வழக்கம் போல புனித யாக்கோபு ஆலயத்திற்கு (உள்ளகரம்) சென்றோம். போதகர் ரவீந்திரன் அவர்கள் இன்று சிறப்புச் செய்தியை வழங்கினார். ஒரு கதையுடன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். சிறிவர்கள் கதை என்றல் மிகவும் விரும்பி கேட்பார்கள், ஆதலால் ஒரு குட்டிக் கதையுடன் ஆரம்பிப்பதாக கூறினார்.

ஒரு கிறிஸ்தவ பள்ளியின்  தாளாளர், நெடுநாளாக  ஒரு ஆசை நிறைவேறாமல் அவதிப் பட்டுகொண்டிருந்தார். தானும் தலைமை ஆசிரியரைப்போல் வகுப்புகளுக்குள் சென்று மாணவ மாணவிகளை கேள்வி கேட்டு அசத்தவேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. ஆனால் அதற்கான வாய்ப்பே அவருக்கு கிடைக்க வில்லை.

ஒருநாள் அதற்கான நேரமும் வந்தது. அன்று ஆசிரியை ஒருவர் கையில் வேதாகமத்தை வைத்துக்கொண்டு பாடம் நடத்திகொண்டிருந்தார். உடனே தாளாளர் இதுதான் தருணம் என உள்ளே நுழைந்தார். பொதுவாக தலைமை ஆசிரியர்தான் திடீர் திடீரென ஏதாவது ஒரு வகுப்புக்குள் நுழைந்து கேள்விகள் கேட்பார். ஆனால் தாளாளர் வருவதை பார்த்த ஆசிரயைக்கும் மற்ற மாணவ மாணவிகளுக்கும் ஒரே ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி.

தாளாளர் ஒவ்வொருவராக உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். நடு வரிசையில் இருந்த மாணவன் ஒருவன், அருகில் இருந்தவனிடம் “நண்பா, காலையில் நாம் இருவரும் ஒரு பைத்தியக்காரனை பேப்பரைச் சுற்றி அடித்தோம் அல்லவா? அதனை பார்த்துவிட்டார் போலடா. நாம் இருவருக்கும் அடி உறுதி” என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.

தாளாளர் ஒவ்வொரு மாணவனாக பார்க்க பார்க்க, யாரை அவர் பார்த்தாரோ அவனுடைய இருதய துடிப்பு ஒரு அதி வேக ரெயில் வண்டி மாதிரி வேகமாக அடித்துக்கொண்டது. ஒரு மாணவனை நோக்கி அவர் கேட்டார், “கோலியாத்தின் மீது கல்லை அடித்து யார்? என்ற கேள்வியை கேட்டார். அவன் சொன்னான், ”  சத்தியமாக நான் அவனக் கல்லால் அடிக்க வில்லை சார்.” கோபமடைந்த தாளாளர் ஆசிரியை பக்கம் முறைத்துக்கொண்டே திரும்பினார்.

ஆசிரியை சொன்னார்கள், “இவன் ஒரு நல்ல பையன் சார், அப்படி வமபு தும்புக்கு  போகமாட்டன்”. ஆகா ஆசிரியைக்கும் தெரியவில்லை என முடிவு செய்த தாளாளர் தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டார்.

தலைமை ஆசிரியரோ “நீங்க,  ஒண்ணுக்கும் கவலைப் படாதீங்க, ஒரு பத்து நிமிஷம் கொடுங்க, பிரம்பெடுத்தா யாருன்னு கண்டுபிடித்திடலாம்”.

கோபமடைந்த தாளாளர் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் முறையிட்டார். மனைவி “நானே கரண்ட் இல்லாமல் மிக்ஸ்யில் மசால் பாதியில் அரைத்தபடி உள்ளது என்ற கவலையில் உள்ளேன். நீங்க என்னடான, பையன் கல்லால் அடித்தான், வாத்தியார் கல்லால் அடித்தார் என புலம்பிகிட்டு இருக்கீங்க. பையங்கல்னா அப்படித்தான் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்ளுவார்கள். சரி விடுங்க, சாப்பிட வாங்க” …

கடுப்படைந்த தாளாளர் மாடிக்குச் சென்று தனது அறையின் கதவை வேகமாகச் சாத்திவிட்டு, சட்டையை கலட்டி ஆணியில் மாட்டிக்கொண்டே சொன்னார், “கோலியாத்தை கல்லால் அடித்து தானியேல் என ஒருந்தனுக்கு கூட தெரியல!” ….

போதகர் இந்தக் கதை ஏன் சொன்னார் என்றால் பெற்றோகள் முதலில் வேதாகமத்தை நன்கு படித்து புரிந்துகொண்ட, அதன் படி வாழவேண்டும். அப்போதுதான் பிள்ளைகளும் அந்த வழியில் வர முயற்சிப்பார்கள்.

போதகர் சொன்னார்,”நான் ஒரு வழிப நண்பரின் மகன் (பெங்களூரில் வேலை பார்த்த பொறியாளர்) அறையில் தங்கவேண்டி வந்தது. காலையில் ஒரு வயதான பெரியவர் வந்து ஷூ துடைத்தார். இந்தப்பையனும் பத்து ருபாய் கொடுத்தார், .. ஒரு ஜோடி ஐயர்ன் செய்யப்பட்ட ஆடை வரவும் அந்த சலவைத் தொழிலாளிக்கு ஒரு பத்து ருபாய் கொடுத்தான். … இப்படியாக ஒருநாள் முழுவதும் அவனுடைய நடவடிக்கைகளை கவனித்தபோது …  அவனுடைய சுய தேவைகளை  கூட அவனால் செய்துகொள்ள முடியவில்லை , இல்லை தெரியவில்லை … அது யாருடைய குற்றம், அவனுடைய குற்றமா? கண்டிப்பாக கிடையாது .. அவனுடைய பெற்றோரின் குற்றம் … பிள்ளைகளை சிறு பிள்ளையிலேய சரியாய் வளர்க்க வேண்டும்

  1. தினமும் வேதம் வாசிக்கும் பழக்கம்
  2. பெரியவர்களை மதிக்கும் பழக்கம்
  3. தினமும் பாடம் படிக்கும் பழக்கம்
  4. பள்ளிமுடிந்து வந்தவுடன் புத்தகங்களை ஒரு ஷெல்பில் அடிக்கி வைப்பது
  5. சாப்பிட்டவுடன் தட்டு தம்ளர்களை கழுவும் இடத்தில் போடா வேண்டும்.

இப்படி சிறு சிறு வேலைகளையாவது சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே பழக்க வேண்டும். வேதாகமத்தையும் படிக்க வேண்டும், பாடத்தையும் படிக்க வேண்டும் .. அப்படிப்பட்ட குழந்தைகள் தான் பிற்காலத்தில் நாட்டின் சிறந்த குடிமகன்களாக வருவார்கள் …

மிகவும் முக்கியமாக குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் ரிமோட் எடுக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் … உங்களுடைய பாதி பிரச்சனை முடிந்தது …

குறிப்பாக அரசு தேர்வு எழுத்தும் மாணவர்களை காலை முதல் மலை வரை படிப்பு மற்றும் டயுசன் என அதிகமாக அலையை விடாதீரிகள் ..கொஞ்சம் ஓய்வும் கொடுங்கள் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: