We bought a Super car Toy in Madurai

We bought a new toy for Alan (my son) last month. This car has a peculiar way of traveling. The way it bounce back after hiting any object or wall … and the vertical rotation ….  … Made in China … Rs 35.00 … battery operated …….not suitable for children under 3 years due to the small parts …

The vertical rotation
The bounce back …

Advertisements

Muthumalai முதுமலை

முதுமலை – பாகம் 2
டிக்கெட் வங்கிக் கொண்டு உள்ளே சென்ற நான் பிரமித்துப் போனேன். அத்தனை யானைகள் அழகான ஒரு சிறைய கோயிலைச் சுற்றி நின்றுகொண்டிருந்தன. ஒவ்வொரு யானை அருகிலும் ஒரு யானைப் பாகன் நின்றுகொண்டிருந்தான் அல்லது யானையின் மீத உட்கார்ந்துகொண்டிருந்தான்.

elephants witing for the pooja, Muthumalai, Nilgiris

elephants witing for the pooja, Muthumalai, Nilgiris


அந்த சிறிய கோயிலில் உள்ள சிலைக்கு யானைகளே பூஜை நடத்துகின்றன. ஒரு யானை மாலை மற்றும் பூவினைப் போடுகிறது. மற்றொரு யானை தீபம் காட்டுகிறது. ஒரு யானை தேங்காய் உடைகிறது. அதன் பின் வரிசையா ஒன்றன்பின் ஒன்றாக கலைந்து செல்கின்றது. யானைகள் பூஜைக்கு நிற்கும்போது அதன் முன் கால்கள் இரண்டையும் சங்கிலியால் கட்டி விடுகிறார்கள். சிறுவர் முதல் பெரிவர் வரை கூட்டம் அலை மோதுகிறது இந்த நிகழ்வை பார்ப்பதற்கு.

Muthumalai – முதுமலை

PART :1
முதுமலை – அகல விரித்தது எங்கள் இமைகளை

நண்பர்களுடன் சுற்றுலா செல்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அலுவலக நண்பர்களுடன் நிலகிரிமலைத் தொடரில் சில ஊர்களை சுற்றிப்பார்க்க திட்டமிட்டோம். வேன் ஒன்றை வாடகைக்குப் பிடித்து, மேட்டுப்பாளையத்தில் ஆரம்பித்து, அருகில் இருந்த சில நல்ல இடங்களை பார்க்க ஆரம்பித்தோம். எங்களுடைய கணக்குப்படி சரியான நேரத்திற்கு முதுமலையை சென்று அடைய முடியவில்லை. சாயங்காலம் ஐந்தரை மணிக்கு விரைந்து சென்று வேனை நிறுத்திவிட்டு ,…. டிரைவருடன் ஓடி எவ்வளவோ முயற்சி செய்தும் யானைச் சவாரிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது, அதிகாலையிலேயே சென்று முன்பதிவு செய்யவேண்டுமென்று.

நீங்களும் யானைச் சவாரி செய்ய நினைத்தால் காலையிலேயே ( ஆறு அல்லது ஏழு ) மணிக்குள் முன் பதிவு செய்து விடுங்கள்.

நண்பர் பாலா டிக்கெட் வாங்க டிரைவர் அண்ணாவுடன் சென்று விட நாங்கள் பின்னே நடந்து சென்றோம். அப்போது ஒரு வடநாட்டு அறிவாளி மனசாட்சியே இல்லாமல் முன்னே நின்றுகொண்டிருந்த வாகன ஓட்டியை அரட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய புதிய காரும், அவன் அணிந்திருந்த நகைகளும், கத்திய காட்டுக் கத்தலும் அவனுடைய பணத் திமிரை காட்டியது.

A man serving a block of food to an elephant in muthumalai

A man serving a block of food to an elephant in muthumalai

தொடரும் …