நினைவில் நிற்கும் பள்ளிகொண்டா ஞாபகம்

பள்ளிகொண்டா ஒரு பசுமயான  கிராமம். அது வேலூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் ஒரு தெரிந்த அண்ணாவின் கடை, சில பெட்டிக் கடைகள், காய்கறிக் கடை, மாவு அரைக்கும் கடை, முடி வெட்டும் கடை, ஒரு திரையரங்கு (சினிமாத் தியேட்டர்), …ஒரு தேங்காய் மண்டி, அரிசி மண்டி, …..

பள்ளிகொண்டா என்ற ஊரில்தான் என்னுடைய ஞாபகம் (memory) ஆரம்பிக்கிறது. அங்கு என் அம்மா ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்கள். தினமும் அம்மா காலையில் பள்ளிக்குச் செல்லும் பொது என்னை என்னுடைய பள்ளியில் விட்டுவிட்டு, தன்னுடைய பள்ளிக்குச் செல்வார்கள்.

கருப்புநிற ஷூ நினைவில் இருக்கிறது. நீளமான பழையகால வீடு நினைவில் இருக்கிறது. வீட்டு முதலாளியின் அம்மா (பாட்டி) ஒரு தனி அறையில் இருந்தார்கள். பக்கத்து வீட்டில் பாயம்மாச்சி என்ற பாட்டி இருந்தார்கள்.

இந்த இரண்டு பட்டிகளும்தான் அம்மா பள்ளி சென்றபின் எங்களை பார்த்துக்கொள்வார்கள் என அம்மா அடிக்கடிச் சொல்லுவார்கள்.  அப்பாவும் ஆசிரியர் தான், இந்த ஊரே அப்பாவை “வாத்தியாரப்பா” எனதான் அழைக்கும்.

எனக்கு திருமணமானவுடன் முதல் காரியமாக எனது அம்மா எங்களை பள்ளிகொண்டா கூட்டிச்சென்று பாட்டியிடம் காட்டினார்கள். பாட்டி மிகவும் தளர்ந்து, கண் பார்வை முழுவதும் இல்லாமல், சிறிது கேட்கும் திறனுடன் இருந்தார்கள். அம்மா சத்தமாக பேசி நாங்கள் வந்ததை சொன்னவுடன் மிகவும் மகிழ்ந்தார்கள்.

எந்த வீட்டில் பாம்பு வந்தாலும் அப்பாதான் சென்று அடிப்பார்கள். பாம்பு செத்தவுடன் பக்கத்து வீட்டுக்காரர்கள், அதனை அடக்கம் செய்து பால், அரிசி ..பூ முட்டை எல்லாம் படைப்பார்கள்.

என்னுடைய வீட்டிலேய அப்பாவின் தங்கை (ஷீலா) அத்தை இருந்தார்கள். ஷீலா அத்தைக்கு மிக நீளமான முடி. இரட்டை சடை போட்டு, அந்த சடையை கழுத்தில் சுற்றிக்கொண்டு சாகப்போகிறேன் என பயமுறுத்துவார்கள். தினமும் தோட்டத்தில் பால் சோறு ஊட்டுவார்கள்.

அப்பா வேறு ஊரில் வேலையில் இருந்ததால் வரம் ஒருமுறை அதாவது சனி மற்றும் ஞாயித்துக் கிழமைகளில் வருவார்கள். சாயங்காலம் பள்ளி விட்டதும் வாட்ச்மேன் அண்ணா கையைப் பிடித்துக் கொண்டு வீடுவரை நடந்து வந்தது நினைவில் இருக்கிறது.

பசுமரத்தாணி போல நினைவில் இருக்கும் விஷயம், என்னுடைய பள்ளியில் படித்த ஒரு மாணவியின் வீட்டில் ஒரு பெரிய பக்கெட்டில் தண்ணீர் வெளியே வைத்து இரண்டு பிளாஸ்டிக் டம்பளர்கள் போட்டு வைப்பார்கள். இடைவேளை நேரங்களில் பள்ளி குழந்தைகள் அந்த வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடிப்பார்கள்.

அம்மாவின் பள்ளியில் அறிவியல் செய்முறை விளக்கம் நடக்கும் நாட்களில், அம்மாவின் வகுப்பில் உள்ள மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு என்னைத் தங்கள் மடியில் வைத்துக் கொள்வார்கள்.

சில சமயங்களில் அம்மாவின் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள சின்ன பாலத்தில் நின்று கீழே ஓடும் தண்ணீரை பார்ப்பது மிகவும் பிடித்தமான விஷயம். ஒரு சில நாட்களில், மழை அதிகம் பெய்தால்  தண்ணீர் கரை புரண்டு ஓடும். அப்போது இரண்டு கரைகளிலும் வேலூர் மற்றும் குடியாத்தம் செல்லும் பேருந்துகள் நின்றுகொண்டிருக்கும். எனது வீட்டின் பின்புறம் இருந்த சின்ன ஓடையும் இந்த பாலாற்றில்தான் சென்று கலக்கும்.

அப்பா, அம்மாவிற்கு வேலை மாற்றம் கிடைத்து நங்கள் இராமநாதபுரம் சென்றபோது அனைத்து நண்பர்களும் அழுது எங்களை வழியனுப்பி வைத்தார்கள். நான் வேலை நிமித்தமாக அந்த வழியாக பெங்களூர் செல்லும்போதெல்லாம் இந்த
நினைவுகளும் மனதில் ஓடும்.

School Project – Model of a forest

பள்ளி ப்ராஜெக்ட்

school project - a model of a forest

school project - a model of a forest

எனது மகன் அலன் ஜெப்சனுடைய பள்ளி ப்ராஜெக்ட், ஒரு காட்டின் அமைப்பை ஒரு பெரிய வெள்ளை சார்ட்டில் வரையவேண்டும். நன் ஒரு பெரிய வெள்ளை சார்ட்டை எடுத்து அதில் மேல் பாதிக்கு நீல வண்ண வாட்டெர் கலர் பூசி, பின்பு மீதிப் பாதிக்கு பச்சை நிறம் பூசி சிறிது நேரம் காயவைதோம்.
மேஜிக்பாட், மற்றும் பல சிறுவர் புத்தகங்களில் இருந்து நிறைய விலங்கின் படங்களை வெட்டி வைத்துக் கொண்டோம்.

ஒரு நான்கு பெரிய மரங்கள் மற்றும் நான்கு சிறிய மரங்கள் வடிவி வெள்ளை சார்ட் பேப்பர் வெட்டி வைத்துக்கொண்டோம். மரவடிவில் உள்ள அந்த காகித மரங்களுக்கு வண்ணம் பூசி அவற்றை சார்ட் பேப்பரில் ஓட்டினோம். வெட்டி வைத்துள்ள் மிருகங்களை ஆங்காங்கே ஓட்டினோம். நமக்குத் தேவையான காட்டின் மாடல் கிடைத்து விட்டது.

ஒரு முப்பரிமான வடிவினைப் பெற பேப்பர் மரங்களை ஒன்றன் மீது ஒன்று முன்னும் பின்னுமாக ஓட்ட வேண்டும்.

தேவையான  பொருட்கள் :

  • இரண்டு வெள்ளை சார்ட் பேப்பர்
  • ஒரு கத்திரிக்கோல்
  • ஒரு பெவிகால் / கம்
  • வாட்டெர் கலர்
  • பழைய சிறுவர் புத்தகங்கள்.

அடுத்த நாள் காலை பள்ளி பேருந்தில் செல்லும் அலன் இந்த மாடலை ஒழுங்காக கொண்டு சேர்ப்பானோ? என ஒரு எண்ணம் உதித்தது. இரவே என்னிடம் எனது மனைவி புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். காலையில் இந்த மடலை பள்ளி வாகன ஓட்டியிடம் கொடுத்துவிடுங்கள். இல்லை என்றல் இந்த காட்டு மடல் பள்ளி சென்று சேருமா? சேராதா? என இறைவன் ஒருவனுக்கே தெரியும் என்றார்கள்.