மகனின் முதல் நாள் நீச்சல் அனுபவம்

எனது மகன் அலன் முதலாம் வகுப்பு படித்து வருகிறான். எனக்கு டெல்லியில் இருந்து வேலை மாறுதலாகி சென்னை வந்தபோது, முதலில் நாங்கள் D.A.V. பள்ளியில் முயற்சி செய்தோம். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள்.

நண்பன் ஒருவனின் உதவியுடன்தான் அங்கு அப்பிளிகேசன் பாரம் கிடைத்தது. அலன் மிகவும் பயந்து பயந்து தான் அந்த பள்ளிக்கு வந்தான்.

பிள்ளைக்கு தமிழ் அப்போதைக்கு எழுத வராது என்பதால் அப்பிகேசனில் … விவரமாக எழுதி இருந்தோம். மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து இருந்தார்கள். மைக்கில் ஆசிரியைகள் மாணவர்களின் பெயர்களை கூப்பிட்டு தனியாக ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு சில குழந்தைகள் பெற்றோகளை விட்டு பிரிய மனசே இல்லாமல் அழுதவண்ணம் சென்றன.

ஒரு சில பெற்றோகள் அன்பாக அறிவுரை சொல்லி அனுப்பினார்கள், பெரும்பான்மையான செல்போன் தாய்மார்கள் அரட்டி உருட்டி அனுப்பினார்கள். LKG / UKG வகுப்புகளுக்கு ஒருமணி நேரத் தேர்வு. அலன் ஒருமணி நேரம் கழித்து திரும்ப வந்தான். முகம் வாடி இருந்தது, ஏன் என கேட்டதற்கு “தமிழில் கடைசியாக எழுதச் சொன்னார்கள். எனக்கு தெரியாது எனச் சொல்லியும், தெரிந்தவரை எழுது என்றார்கள்” என்றுகூரினான்.

அவனுக்கு அந்த பள்ளி பிடிக்க வில்லை. எனவே புனித பிரிட்டோ பள்ளிக்கு அட்மிசனுக்காக சென்றோம்.அங்கு முதலாவதாக அவனை கவனத்து நீச்சல் குளம். உடனே பள்ளி பிடித்து விட்டது அவனுக்கு. அவனோ UKG. ஆனால் பள்ளி ஒன்றாம் வகுப்பிர்க்குமேல் தான் நீசை குலதிகுள் அனுமதிக்கும் என பிற்பாடு தெரிந்து கொண்டான். ஆனாலும் அவனுக்கு மனதிற்குள் ஒரு திருப்த்தி. அடுத்த ஆண்டு நீச்சல் கட்டாயம் பழகுவேன் என்று.

இப்போது முதலாம் வகுப்புக்கும் போயாச்சு. நீச்சல் பழகும் வேலையும் வந்தது. ஆனால் கூடவே பன்றிக் காய்ச்சல் பரவுகிற செய்தியும் வந்தது … வகுப்புகள் நடக்கவில்லை … கடைசியாக இன்று வெற்றிகரமாக நீச்சல் குளத்தில் குளித்து விட்டு மிகவும் மகிழ்ச்சியாக வந்தான்.

இன்று காலையில் அவனாகவே சீக்கிரம் எழுந்து பல் துலக்கி, குளித்துவிட்டு அவசர அவசரமாக கிளம்பியவன், ஒரு நூறு முறையாவது அம்மாவிடம் நீச்சல் பற்றி பேசுவது, நீச்சல் கண்ணாடியை மாட்டி பார்த்துப் பின்பு கழட்டி வைப்பது, துண்டு நீச்சல் காற்சட்டை …சரியாக உள்ளதா எனப் பார்ப்பது … இப்படியாக பொழுது போக்கினான்.

அவனின் வேண்டுகோளுக்கு கட்டுப்பாட்டு, வேன் வருவதற்கு முன்னதாகவே அங்கு சென்று காத்துக் கொண்டிருந்தோம். வேன் வந்தது மகிழ்ச்சியாக ஏறிச் சென்றான்.

மாலை நான் வீடு திரும்பியபோது துங்கிக் கொண்டிருந்த அவன், திடீரென முழித்து அழ ஆரம்பித்தான். நான் என்ன எனக் கேட்க, கண்ணாடி உண்டைந்து விட்டதை மெதுவாகக் கூறினான். நானும் அவனை சமாதானப் படுத்தி வேறு வாங்கித் தருவதாக சொன்ன பிறகுதான் அவனது முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்தது.

இன்னும் ஒருமுறை கண்ணாடியை உடைத்தால் … நீச்சல் வகுப்பில் இருந்து நீக்கி விடுவேன் என அம்மா மிரட்ட, ஒழுக்கமாக தலை ஆட்டினான். கடவுளுக்குத்தான் தெரியும் அடுத்த கண்ணாடி எப்போ உடையும் என்று? 🙂

என்ன, நீச்சல் வகுப்பு எப்படி நடந்தது என நான் கேட்க ” சூப்பரா இருந்தது, ரொம்ப நேரம் விளையாடினோம்”. இரண்டு சுட்டிக் குழந்தைகளின் பெயர்களை சொல்லி அவ ரொம்ப மோசம் … என்னோட நண்பனை தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டா. ..மாஸ்டர் சில பாட்டில் மூடிகளை எறிவார், நாங்க போய் எடுத்து வரவேண்டும் அதிகம் மூடிகளைச் சேர்க்கும் டீம் வெற்றி பெரும் …
இப்படியாக ஒரே நீச்சல் கதைதான் போங்கோ.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: