Indian Diwali

இனிய திபாவளி வாழ்த்துக்கள்.

இன, மொழி, மத வேறுபாடின்றி நம் நாட்டில் கொண்டாடப்படும் திரு விழாக்களில் இதுவும் ஒன்று. எனினும் நாம் அனைவரும் சேர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுதலை குறைக்க உழைக்க வேண்டி உள்ளது.

எவ்வளவு வெடிகள் வாங்க வேண்டும்?

பள்ளிகளில் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் குழந்தைகள் வெடி வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். ஆனாலும் பெற்றோராகிய நாம், சுற்றுச்சூழல் மாசுபடுத்தல் பற்றியும், காற்று மாசுபடுதல் பற்றியும், ஒலி மாசுபடுதல் பற்றியும் எடுத்துக் கூறி வெடிப் போடும் பழக்கத்தை மெது மெதுவாக குறைக்க வேண்டும். இந்த ஆண்டு ஐநூறு ரூபாய்க்கு வெடி வாங்கினால் அடுத்த ஆண்டு நானூறு ரூபாய்க்கு வாங்குங்கள்.

பக்கத்து வீட்டுக் குழந்தைகள் வெடி வெடிப்பதை பார்த்த எனது மகனும் வெடி வேண்டும் என்று கேட்டார். நானும் ஒரு பாக்கேட் சங்குச் சக்கரம், ஒரு பாக்கேட் புஷ்வானம், சில பாக்கேட் குருவி வெடிகள், சில பாக்கேட் லக்ஷ்மி வெடிகள், சில பாக்கேட் கம்பி மத்தாப்பு, ஒரு பாக்கேட் பிஜலீ வெடி, ….. அவன் ராகேட் வெடி கூட கேட்டான் … அனால் வேலை அதிகம் என அம்மா சொன்னவுடன் வேண்டம் என்று கூறிவிட்டான் ..

மொத்தம் இருநூறு ரூபாய் செலவானது ..

வெடிப்பதற்கு  முன்பு

  • ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு மெழுகுதிரி கொளுத்தி வைத்துக்க கொள்ளுங்கள்.
  • ஊதுபத்தியை ஒரு சிறு குச்சியில் கட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • சாலையின் இரண்டு  பக்கங்களிலும் மகள் நடமாட்டம் இல்லை எனில் வெடிக்கவும்.

மாமிக்குப் பாராட்டு

வெடி வெடிப்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், வெடித்தபின் வரும் குப்பைகளை நாமே கூட்டி குப்பை தொட்டியில் போடவேண்டியது அவசியம். இரவு வெடித்த வெடியினால் உண்டான குப்பைகள் அப்படியே கிடக்க தூங்க சென்றுவிட்டோம் …. காலை எழுந்து செடிக்கு தண்ணீர் விட்டுகொண்டிருக்கும் பொது எதிர் வீட்டு மாமியின் திட்டல் காதில் ஒலித்தது …. “வெடிக்க மட்டும் தெரியுது … அள்ளிப்போட தெரியல …. …. ….”. சில பக்கா சென்னை திட்டுக்கள் விளங்கவில்லை … எட்டு மணிக்கு எழுந்த மனைவி (வழக்கமாக ஆறு மணிக்கு எழும்பும்) … குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு தேநீர் போட்டுக் கொடுத்தார். நான் வாயவே திறக்க வில்லை (திட்டுக்கள் பற்றி …🙂 )

எது எப்படி போனாலும் அந்த மாமிக்குப் பாராட்டு சொல்லியே ஆகவேண்டும். இந்த நாட்களில் எத்தனை பேர் சாலை குப்பையாக கிடப்பதைப் பற்றி கவலைப் படுவார்கள்?. பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் .. தனித் தனியே தங்கள் குடும்பத்தாருடன் வெடித்து மகிழ்ந்தனர் …

ஒரு கிறிஸ்தவ நண்பரின் கருத்து
தீபாவளி இந்துக்கள் பண்டிகை ஆதலால் நாமும் அதே தினத்தன்று வெடி வெடித்தால், அந்தப் பண்டிகையை கொண்டாடிய மாதிரி ஆகும்.  ஆதலால் தீபாவளிக்கு ஒரு நாள்  முன்  அல்லது ஒரு நாள் பின் வெடி வெடித்தால் – நாம் கடவுளின் தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்று கூறினார். உடனே எனக்கு அப்பா ஆராய்ச்சி சேது வைத்திருந்த பழமொழிகளில் ஒன்று நினைவிற்கு வந்தது. ” கழுதை  விட்டையில்  முன் விட்டை என்ன பின் விட்டை என்ன?”.

பழமொழியின் விளக்கம் – தின்றது கழுதை விட்டை. மதத்தினை கருத்தில் கொல்லாமல் நாம்  இந்தியர்கள் என்பதனை மதில் கொண்டு மகிழ்ச்ச்யாக கொண்டாட வேண்டும். அரசு விடுமுறை கிடைத்ததா இல்லையா என்பதல்லவா நமது கவலையாக  இருக்க வேண்டும்.

மற்றொரு நண்பரின் கருத்து கிருஸ்தவர்களாகிய நாம் ஏன் வெடி வெடிக்க வேண்டும்? … நல்ல கருத்து என பாராட்ட நினைக்கும் முன்னமே … அவர் சொன்னார்  “நாம் கிறிஸ்மஸ்   அன்று வெடிக்க வேண்டும்.” …

கவனத்தில் கொள்க

  • எப்போதும் ஒரு வாலி தண்ணீர் வைத்துக் கொண்டு  வெடி வெடிப்பது நல்லது. கம்பி மத்தாப்புக்கள் வெடித்த பின் சூடான கம்பியை வாளித் தண்ணீரில் போட்டு விடுங்கள்.
  • வெடி வெடிக்க தேவையான நெருப்பை கொடுக்கும் ஊதுபத்தியை  … ஒரு நீளக்  குச்சியில் கட்டி கொடுத்துவிடுங்கள்.
  • திரியை சிறிது கில்லி வெடிகளை பத்தவைகவும்
  • வெடிக்காத வெடிகளை விட்டுவிடுங்கள். புதிய புதிய வழிமுறைகளை முயற்சிக்க  வேண்டாம்.
  • குழந்தைகள் வெடி வெடிக்கும்போது கூடவே இருக்க வேண்டும்.
  • ராக்கெட் வெடி வெடிக்கும்போது மிகை கவனமாக இருக்க வேண்டும். இரும்புக் குழாய்  அல்லது ஊது குழாய் மண்ணில் நிறுத்தி அதின் உதவியோடு ராக்கெட் வெடி வெடிக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் வெடிக்க வேண்டாம். ராக்கெட் வெடி வெடிக்கும் குழாய் செங்குத்தாக இருக்க வேண்டும்.
  • சட்டை வெடிகளின் நீளம் பத்து செண்டி மீட்டர் வரும்போதே கீழே போட்டு விடுங்கள்.

முக்கியமாக செய்யக் கூடாத ஒன்று

ஆறாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு முகவும் பிடித்த விளையாட்டு, வெடிப்போட்ட பின் இருக்கும் குப்பைகளைச் சேர்த்து கொளுத்துதல். அப்படி கௌதியபின் எரியும் நெருப்பிலே வெடிக்காமல் இருக்கும் வெடிகளைபோட்டு வெடிக்க வைப்பேன். சில வெடிக்காத வெடிகளைப் போட்டேன் வெடிக்கவில்லை. ஒரு குச்சியை எடுத்து அந்த நெருப்பைக் கிளறினேன். படார் என வெடித்த வெடி சில எரியும் பேப்பர்களை எனது சட்டையில் போட்டது. நல்ல சட்டை வீணானது மட்டுமின்றி உடம்பில்  காயங்கள். நான்கு நாட்களுக்கு சட்டையே போடா முடியவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: