Raining in Chennai happy or sad

Raining in Chennai | சென்னையில் மழை

வெண்டை செடிகள்

வெண்டை செடிகள்

கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் நல்ல மழை பெய்தது. வெப்பம் சற்று குறைந்தது. மழை பெய்ய தொடங்கியவுடன் பெரும்பான்மையான வீடுகளில் காயப்போட்ட துணிகளை எடுக்க ஓடுவது போல எனது மனைவியும் விரைந்து ஓடி துணிகளை வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டாள். ஒரு அறையில் கயிற்றினைக் கட்டி துணிகளை காயப்போட்டாள்.

நான் வீட்டில் இருந்த வாளிகளில்    எல்லாம் மழை நீர் பிடித்து வைத்தேன்.  என்னுடைய வெள்ளைத் துணிகளை மழை நீரில் அவ்வப்போது துவைப்பது வழக்கம். மீதம் உள்ள மழை தண்ணீரை அடுத்தடுத்த நாட்களில் செடிகளுக்கு விடுவது என்னுடைய பழக்கம்.

நான் தங்கயுள்ள வீட்டின் பெரும்பான்மையான தரை சிமென்ட் தரையாகும். அவற்றில் சில இடங்களை பெயர்த்து எடுத்து குப்பை மண் போட்டு செடிகளை வளர்க்க ஆரம்பித்து உள்ளேன்.

மாடியிலிருந்து விழும் மழை நீர் தென்னை மரத்திற்குச் செல்ல சிறிய கால்வாய் வெட்டி விட்டேன். வீட்டில்  உள்ள மாமரம், கொய்யா மரம் மற்றும் தென்னை மரங்களைச் சுற்றி ஆழமான  குழி தோண்டியது  தண்ணீர் தேங்க வசதியாக உள்ளது. கிடைக்கின்ற மழை நீரெல்லாம் வீட்டிற்குள்ளேயே தேங்கி ஊறினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வீட்டின் உட்பகுதியும்  சிலுசிலுவென இருக்கும். செடி கொடிகளும் பச்சைப் பசுமையாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னால் நானும் எனது மகனும் சில வெண்டை விதைகளையும், கத்தரி விதைகளையும் விதைத்தோம். தினமும் அது எவ்வாறு வளர்ந்து வறுகிறது என்பதை பார்ப்பதே எங்கள் இருவரில் முதல் வேலையாக இருக்கிறது.

சென்னையில் பெரும்பான்மையான இடங்கள் சிமென்ட் போட்டு மூடப்பட்டுள்ளதால் மழை நீர் சாலைகளிலேயே தேங்கி மக்களுக்கு பெரும் சிரமம் கொடுக்கிறது. அலன் (எனது மகன்) தனது அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள விதை முளைத்து செடியாக வளர்வதை நேரடியாகப் பார்ப்பதால், பாடம் நன்கு மனதில் பதிந்து விட்டது.

முருங்கை மரம்

முருங்கை மரம்

தினமும் காலையும் மாலையும் செடிகளுக்கு தண்ணீர் விடுவது மிக முக்கிய கடமையாகச் செய்கிறான்.  தேவையில்லாத சீனா கார்ட்டூன் சேனல்கள் பார்க்கும் போது நாங்கள் அவனுக்கு செடிகளுக்கு தண்ணீர் விடவேண்டும் என்று சொன்னதும் தொலைகாட்சி பெட்டியை அணைத்து விட்டு செடிகளுக்கு தண்ணீர் விடப் போகிறான்.

நல்ல செய்தி:

  • மழையினால் வெப்பம் குறைத்து.
  • மாடியும் மற்ற பகுதிகளும் மழை நீரால் கழுவப்பட்டு பளிச்சென உள்ளன.
  • செடிகளுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு தணீர் விட வேண்டியது இல்லை.
  • தென்னை மரத்தில் ஏற வேண்டியது இல்லை, சில தேங்காய்கள் ஏற்கனவே விழுந்துவிட்டன.

வருத்தமான செய்தி:

  • சில செடிகள் சாய்ந்து விட்டன.

சாய்ந்துபோன செடிகளுக்குப் பக்கத்தில் ஒரு குச்சியை ஊண்டி முட்டுகொடுத்து வைத்துள்ளோம். முருங்கை மரம் மட்டுமாவது பிழைத்துக்கொண்டால் நல்லது.

One Response

  1. In addition to your works you are doin ‘gardening’ also!! wow.. Tats nice…🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: